சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஜல்லிக்கட்டு காளை குத்தி வாலிபர் பலி.

jallikattu-stabs-a-bull-and-kills-a-young-man
  India Border அருண் குமார்   | Last Modified : 12 Oct, 2020 07:28 pm தமிழகம் பொது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகாபுரியை சேர்ந்தவர் ரமேஷ் வயது 23. எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்,மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆர்வம் உடையவர். இவர் மேலூரில் உள்ள வினோபா காலனியில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் நண்பர் ஒருவரை பார்க்க வந்தார். அப்போது அங்குள்ள குளத்தில் நண்பர் வளர்த்த காளையை குளிப்பாட்டி உள்ளார். அப்போது அந்த காளை எதிர்பாராதவிதமாக ரமேஷை கொம்பால் முட்டியது.

இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் பலத்த காயத்துடன் சுருண்டு விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக ரமேஷை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ramesh, 23, hails from Alagapuri near Melur in Madurai district. He used to work as an electrician and was stabbed to death by a bull.