சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

மதுரையில் கிடைந்த அரியவகை ஆசிரியம் கல்வெட்டு

old-inscription-found-nearby-madurai
  மீனா   | Last Modified : 12 Oct, 2020 08:24 pm தமிழகம் பொது

மதுரை விமான நிலையத்தை அடுத்து உள்ளது தாற் கூடல் செங்குலம் என்ற பகுதி. அங்கு உள்ள கண்மாயில் பழங்காலத்து கல்வெட்டு இருப்பதை கண்டறிந்தவர் முதுகலை மாணவர் திரு. இரஞ்சித் என்பவர்.

அவர் தந்த  தகவலை கொண்டு மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் து. முனிஷ்வரன் மற்றும் லட்சுமணமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

பாதுகாப்பு தந்து காவல் செய்யும் பாடிகாவல் உரிமையை எந்த ஊருக்கு யாருக்கு என்பதை அறிவிப்பதை ஆசிரியம் தருதல் என்று அழைக்கப்படுகிறது.  ஆசிரியம் என்பது அடைக்கலம் தருதல் என்றும் பாதுகாப்பு தருதல் என்று ம் பொருள் ஆகும். 

பாடிகாவல் முறையில் குறிப்பிட்ட அளவிலான கிராமத்தை சில குறிப்பிட்ட குழுவினர் பாதுகாத்து,  காவல் காத்து வருவதை ஒரு கல்வெட்டில் பதித்து அதை ஊர் மையத்தில்,  கோவிலில், ஊர் எல்லையில் அல்லது ஊரின் முக்கிய இடத்தில் வைப்பது வழக்கம். 

இப்போது கண்டறியப்பட்ட கல்வெட்டு 3 அடி நீலம் மற்றும்  1 அடி அகலம் என்றும் அதில் "பாடிநகரதேவர் கண்டிய தேவாசிரியம் " என்று ஐந்து வரிகளில் எழுதப்பட்டுள்ளது என்று தகவல் வந்துள்ளது. 

இதன் மூலம் மன்னர்கள் ஆட்சி காலத்தில்  ஊரவர்,  நாட்டவர்,  சிற்றரசர்கள் , படை வீரர்கள்,  அந்த அந்த பகுதியில் சிறு சிறு படைகள் அமைத்து அந்த பகுதியையும் மக்களையும் பாதுகாத்து வந்தது தெரியவந்துள்ளது. 

கிபி. 13-14 ஆம் நூற்றாண்டில் நிலத்து உரிமையாளர் ஆட்சியாளர்களாக செயல் புரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

அவர்களுக்கு ஊரை பாதுகாத்து காவல் செய்யும் ஆசிரியம் உரியை வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. 

ஆசிரியம் உரிமை உள்ளவர்கள் கோவில் நிறுவன பொறுப்பு ஏற்றுதல்,  பாசன தண்ணீரை வழி நடத்தி முறையாக செயல்படுத்தும் பணி, பொது செயல்பாடுகளில் முக்கிய பொறுப்பு போன்ற பணியிலும் ஈடுபடுவர் என்றும் தெரியவந்துள்ளது. 

கொம்பாடி என்ற பகுதிக்கு கண்ணியதேவர் என்றவர் பாடிகாவலாக உறுதிபடுத்தும் வகையில் இந்த கல்வெட்டு இருக்கிறது என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 

மதுரை பகுதியில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஆசிரியம் கல்வெட்டு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Old inscription found nearby madurai