சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கணவன் மனைவி சண்டையில் தீயில் உயிரிழந்த பக்கத்து வீட்டு 3 வயது குழந்தை.

husband-and-wife-have-a-3-year-old-child-next-door-who-died-in-a-fire
  India Border அருண் குமார்   | Last Modified : 14 Oct, 2020 07:19 pm தமிழகம் பொது

சேலம் அருகே தலைவாசல் உள்ள ஆறகளுர் 4-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து வயது 42, லாரி டிரைவர். இவருடைய மனைவி தெய்வானை வயது 35. இவருக்கு மோனிஷா வயது17 என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது,இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மருதமுத்துவின் மனைவி, தனது மகளுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டனின் மனைவியும், கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினருமான திவ்யா வயது27,என்பவரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த மருதமுத்து கையில் பெட்ரோல் கேனுடன் அங்கு வந்தார். அவர் அங்கு நின்று கொண்டிருந்த மனைவி-மகள் மீது பெட்ரோலை ஊற்ற முயன்றார்.

அப்போது திவ்யாவும், அவரது 3 வயது மகள் தனுஸ்ரீயும் வீட்டின் வராண்டாவில் இருந்துள்ளனர். வீட்டின் வராண்டாவில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்ததால் மருதமுத்து ஊற்றிய பெட்ரோல் அடுப்பின் மீது பட்டு அங்கும் தீப்பற்றியது. இதில் திவ்யாவும், அவருடைய மகளும், மருதமுத்துவின் மனைவி தெய்வானை, மகள் மோனிஷா ஆகிய 4 பேரும் தீப்பற்றி படுகாயம் அடைந்தனர். 

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் 4 பேரும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் லாரி டிரைவர் மருதமுத்துவை பொதுமக்கள் பிடித்து தலைவாசல் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து மருதமுத்துவை கைது செய்தார். மருதமுத்து கைகளிலும் தீக்காயம் உள்ளது. 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 வயது குழந்தை தனுஸ்ரீ, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தாள்.

The husband who suspected his wife and poured petrol on the fire, the child next door died in the fire