சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

நடிகர் ரஜினிக்கு உயர்நிதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

the-high-court-has-warned-actor-rajini
  India Border அருண் குமார்   | Last Modified : 14 Oct, 2020 08:21 pm தமிழகம் பொது

சென்னை கோடம்பாக்கத்தில்  நடிகர் ரஜினிகாந்த்திற்கு  சொந்தமான ராகேந்திர திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர்10 ஆம் தேதி சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் கொரானா தொற்று காரணமாக மார்ச் 24 ம் தேதி முதல் தன்னுடைய ராகவேந்திரா திருமணம் மண்டபத்தில் எந்த நிகழ்ச்சிகளும் நடைப்பெறாத நிலையில் அதன் மூலம் எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்பதால் சொத்துவரிக்கு விலக்கு அளிக்க வேண்டும், அபராதமோ, வட்டியோ விதிக்க கூடாது என உத்தரவிட வேண்டும்  என ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது, நோட்டீஸ் அனுப்பப்பட்ட பத்து நாட்களில் நீதிமன்றத்திற்கு வந்தது ஏன் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார். முதற்கட்டமாக மாநகராட்சியை அணுகாமல் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற நேரத்தை வீணடித்தது ஏன் என்றும் ரஜினி தரப்புக்கு நீதிபதி  கேள்வி எழுப்பினார்.

இதற்காக அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதி, வழக்கையும் தள்ளுபடி செய்தார். ஆனால் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ரஜினி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

The High Court has condemned actor Rajinikanth's lawsuit against the property tax notice for the wedding hall and warned that he would be fined.