சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

சேலத்தில் குளிர்பதன பெட்டிக்குள் அடைத்த முதியவரின் சோக நிலை!

tragedy-of-an-old-man-stuffed-in-a-refrigerator-in-salem
  India Border அருண் குமார்   | Last Modified : 16 Oct, 2020 07:12 pm தமிழகம் பொது

சேலத்தில் குளிர்பதன பெட்டிக்குள் 24 மணி நேரம் அடைத்த முதியவர் உயிரிழப்பு.  சேலம்,கந்தம்பட்டியைச் சேர்ந்த சரவணன், தனது சகோதரர் இறந்துவிட்டதாக கூறி குளிர்பதன பெட்டியை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். வாடகை நேரம் முடிந்த சூழலில், பெட்டியை திரும்ப எடுப்பதற்காக, ஊழியர்கள் வந்துள்ளனர். அப்போது, குளிர்பதன பெட்டியில் முதியவர் உயிரோடு கிடத்தப்பட்டு இருந்ததும், அவரது கை கால்கள் கட்டப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.சேலத்தில் குளிர்பதன பெட்டிக்குள் 24 மணி நேரம் அடைத்த முதியவர் உயிரிழப்பு.

முதியவர் பாலசுப்பிரமணிய குமாரை குளிர்பதன பெட்டியில் வைத்து, அவர் சாவதற்காக விடிய விடிய காத்திருந்ததை கேட்டு அதிர்ந்த அவர்கள், அக்கம் பக்கத்து மக்கள் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதியவர், இன்று 26.10.20, அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

An elderly man who was kept in the refrigerator for 24 hours while still alive died.