சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

குழந்தையை அடிக்க கூடாது என்று சொன்ன கணவருக்கு மனைவி கொடுத்த சாக்?

the-sock-that-the-wife-gave-to-the-husband-who-told-her-not-to-hit-the-baby
  India Border அருண் குமார்   | Last Modified : 18 Oct, 2020 12:28 pm தமிழகம் பொது

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் எல்.ஐ.சி. நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் தனபாலன். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோகிலப்பிரியா வயது27. எம்.எஸ்சி. பட்டதாரி. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கோகிலப்பிரியா தனது குழந்தையை அடிக்கடி திட்டுவதும், அடிப்பதுமாக இருந்துள்ளார். இதை தனபாலன் பலமுறை கண்டித்து உள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 15/10/20 வியாழன் அன்று கோகிலப்பிரியா தனது குழந்தையை அடித்தார். இதை பார்த்த தனபாலன் கோபமடைந்து மனைவியை கடுமையாக திட்டினார். இதனால் மனமுடைந்த கோகிலப்பிரியா, தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை, எடுத்து குடித்து விட்டார்.

உடனடியாக அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு கோகிலப்பிரியா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோகிலப்பிரியாவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

Wife's outrageous decision as husband knocks wife out for hitting baby.