சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

யூடியூப் மூலம் கள்ள நோட்டுகள் தயாரித்தவர்கள் கைது!

counterfeit-banknotes-makers-arrested-on-youtube
  India Border அருண் குமார்   | Last Modified : 19 Oct, 2020 01:50 am தமிழகம் பொது

ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சில்லி சிக்கன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஈரோடு முனிசிபல் காலனி 2-வது வீதியை சேர்ந்த பால்ராஜ் வயது 41,  என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சில்லி கடைக்கு 2 வாலிபர்கள் வந்து அவர்கள் தங்களிடம் இருந்த ரூ.500-ஐ பால்ராஜிடம் கொடுத்து டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிவருமாறு கூறி உள்ளனர். இதனால் பால்ராஜ் அந்த பணத்தை வாங்கிக்கொண்டு டாஸ்மாக்கடையில் மது வாங்குவதற்காக புறப்பட்டார்.

அப்போது அந்த வாலிபர்கள் கொடுத்த ரூபாய் நோட்டு, கள்ள நோட்டு போல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பால்ராஜ் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாரத், ஹபிபூர் ரகுமான் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பால்ராஜிடம் கள்ள நோட்டு கொடுத்தது, ஈரோடு மாணிக்கம்பாளையம் ராம் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சவுந்தர் (20), சதீஸ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களும், காரில் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்ததும், சமீபகாலமாக வியாபாரம் சரிவர இல்லாததால் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடி வந்துள்ளனர்.

இந்த நிலையில், யூடியூப் மூலம் கள்ள நோட்டுகள் தயாரிப்பது எப்படி என்று பார்த்து ஜெராக்ஸ் எந்திரம் மூலம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கள்ள நோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்டதை 2 பேரும் ஒப்புக்கொண்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் எந்திரம், கள்ள நோட்டுகள் ரூ.20,100,500,2000, கார், மோட்டார் சைக்கிள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டன.

Two persons have been arrested for looking into how to make counterfeit notes through YouTube, taking Xerox notes through a Xerox machine and making counterfeit notes into circulation.