சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பள்ளி,திரையரங்குகள், கல்லூரிகள் இயங்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு:

c-theaters-colleges-allowed-to-operate-government-of-tamil-nadu-announcement
  India Border அருண் குமார்   | Last Modified : 31 Oct, 2020 07:29 pm தமிழகம் பொது

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பள்ளி, திரைரங்கம் பொழுது போக்கு போன்றவை இன்னும் அனுமதிக்க படவில்லை.தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் சில தளர்வுகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

1.9,10,11 ,மற்றும்  12 ஆம் வகுப்புகள் வரும் 16 ஆம்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம்.  

2.பள்ளி, கல்லுரி பணியாளர் விடுதிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.,அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

3.திருமணம் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

4.தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட திரையரங்குகளுக்கு நிபந்தனைக்கப்பட்டுள்ளது.

5.நவ. 2 முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம்,புறநகர் ரெயில் சேவை மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

The curfew has been in force in Tamil Nadu since last March. School, theater and entertainment have not been allowed yet.