சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

காதலன் வருவான் என்ற நம்பிக்கையில் மணமேடையில் திருமணத்தை நிறுத்திய பெண்

a-bride-stops-the-marriage-for-her-lover
  மீனா   | Last Modified : 01 Nov, 2020 11:25 am தமிழகம் பொது

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே உள்ள மஞ்சூர் பகுதியை சேர்ந்தது மட்டம்பட்டி என்னும் கிராமம். 

இதில் நேற்று அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி அன்று நடக்க இருக்கும் திருமணம் ஒன்று தடை பட்டு நின்றது. 

அந்த திருமணத்தின் மணப்பெண்ணான ப்ரியதர்ஷினி என்பவர் மாப்பிள்ளை தாலி கட்டும் தறுவாயில் தன் காதலன் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவான் என்றும், அது வரை பொறுமையாய் தாலி கட்டமால் இருக்க வேண்டும் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 

மணப்பெண்ணை சமாதானம் செய்து திருமணத்தை நடத்த உற்றார் உறவினர் முயற்சித்தனர். தாய் அவரை அடிக்க முயற்சித்து சில கலவரமும் நடந்தது.  ஆனால் திருமணமும் நடக்கவில்லை, ப்ரியதர்ஷினி சொன்னபடி காதலனும் வரவில்லை. 

ப்ரியதர்ஷினியின் பெற்றோர் அவரை காரில் அழைத்து கொண்டு லவ்டேல் என்று அழைக்கப்படும் சுற்றுலா தலத்தின் சாலையில் அந்த ப்ரியதர்ஷினியை இறக்கிவிட்டு,  இனி வீட்டிற்கு  வர கூடாது என்று கோவத்துடன் சென்றுள்ளனர். 

ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் ஒன்றாக இல்லாமல் ஒரு குழந்தையுடன் தனியாக வாழ்பவர் தான் ப்ரியதர்ஷினியின் காதலன் பார்த்திபன் . கைவிட்ட காதலனை தேடி சென்னை சென்று அவருடன் சேர்ந்து வாழ ப்ரியதர்ஷினி அவர்கள் சென்னை கிளம்பியதாய் அங்கு உள்ள கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர். 

மகள் ஏற்படுத்திய அவமானத்தால் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வேறு ஊருக்கு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

A bride stops the marriage for her lover