சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தீபாவளி போனஸ் பற்றின அறிக்கை வெளியுட்டுள்ளது தமிழக அரசு

tamilnadu-government-announces-about-diwali-bonus
  மீனா   | Last Modified : 03 Nov, 2020 06:29 am தமிழகம் பொது

வருடம் முழுவதும் பணி புரியும் தொழிலாளர்களை உற்சாகம் படுத்தும் வகையில் தரப்படுவது தான் தீபாவளி பண்டிகை ஒட்டி  வழங்கும் தீபாவளி போனஸ் ஆகும். 

நாட்டின் பொருளாதார  முன்னேற்றத்திற்கு இந்த உற்சாகம்,  ஊக்குவித்தல் அவசியம் ஆனது ஆகும்.  

கொரோனா காரணத்தால் பல துறைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.  அதில் நிறைய அரசு சார்ந்த துறையும்,  அதில் பணி புரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். 

ஊரடங்கால் அனைவரும் வீட்டில் அடைந்து இருந்ததும்,  ஊரங்கு தளர்வுகள்  நடைபெற்ற பின் கொஞ்சம் கொஞ்சமாக வேலைக்கு திரும்பியுள்ளார்கள்.  எனினும் அனைத்து துறைகளும் வருமானம்,  லாபம் வகையில் பாதிப்பட்டுள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இந்நிலையில் தமிழக அரசு தீபாவளி போனஸ் மற்றும் கருணை தொகை பற்றின அறிக்கை வெளியுட்டுள்ளது. 

திருத்தப்பட்ட போனஸ் சட்டம்  2015-இன் படி , போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ. 21,000/- என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர  சம்பள உச்சவரம்பு ரூ. 7,000/- ஆக உயர்ந்தப்பட்டுள்ளது.  அதன்படி 2019- 2020 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட உள்ளது. 

இலாபம் ஈட்டியுள்ள அல்லது நட்டம் அடைந்துள்ள அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும்  "C"  மற்றும் "D" பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம்  போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். 

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக ரூ. 8400/- பெறுவர்.  

மொத்தத்தில் தமிழ்நாடு அரசு பொது துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 இலட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு , 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக  வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

அரசின் போனஸ் மற்றும் கருணை தொகையை கொண்டு தொழிலாளர்கள் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.

Tamilnadu government announces about diwali bonus