சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ஆந்திராவில் ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு கொரோனா? பள்ளிகளின் திறப்பு குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு?

corona-for-teachers-and-students-in-andhra-government-of-tamil-nadu-s-position-on-the-opening-of-schools
  India Border அருண் குமார்   | Last Modified : 04 Nov, 2020 07:31 pm தமிழகம் பொது

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று  வேகமாக பரவியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. நோய்  பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனிடையே கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளில் விருப்பத்துக்கேற்ப பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து ஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மற்றும் பள்ளி வேலையானது அரை நாள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆந்திராவில் கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9,10ம் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 3 நாட்கள் ஆன நிலையில் சித்தூரில் 180 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவிட்டுள்ளார். சித்தூரில் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசு அக்டோபர் 31-ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது. பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்றப்படவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளோடு நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்

இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட வரும் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற  உள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் 9 முதல் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். 

Corona infection for 180 teachers and 10 students in Chittoor. A referendum meeting is to be held throughout Tamil Nadu