வேலூரை சேர்ந்த திருமதி. மிஸ்பா மரியம் என்பவர் மாதவரம் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவர் திரு. அப்துல் ஹைராஸ் ஆவர். நேற்று இரவு வேலூரில் வாகனத்தில் சென்ற அவர் விபத்தில் சிக்கி உள்ளார். அவரை அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இதனை அறிந்த திருமதி. மிஸ்பா மரியம் தன் இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு நோக்கி விரைந்துள்ளார்.
ஐனாவரம் - கொன்னூர் நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த மாநகர பேருந்து மோதி தூக்கி வீசப்பட்டு விபத்து நேரிட்டுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் அந்த செவிலியர்.
விபத்தை தவிர்க்க அங்கு வேக தடை வைக்க வேண்டும் என்று பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
A lady got accident who travels to see her husband who already met with a accident