சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தீபாவளி பண்டிகை கொண்டாட வீட்டுக்கு வராததால் மனைவியின் செயல்! கணவனின் பரிதாப நிலை?

wife-s-action-as-she-did-not-come-home-to-celebrate-deepavali-husband-s-pathetic-condition
  India Border அருண் குமார்   | Last Modified : 22 Nov, 2020 05:14 pm தமிழகம் பொது

சென்னை அம்பத்தூர் சண்முகபுரம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் கணேஷ் வயது 28. இவர், பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள 13-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தீபாவளி பண்டிகை அன்று கணேஷ், பணி நிமித்தமாக பண்டிகையை கொண்டாட வீட்டுக்கு வரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசி, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது மகனுடன் சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று முன்தினம் பணி முடிந்து சென்னீர்குப்பத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்ற போலீஸ்காரர் கணேஷ், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த கணேஷ், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது தாயார் மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் கணேசின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The policeman, who was frustrated that his wife was angry at him for not coming home to celebrate Deepavali, committed suicide