சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

ரஜினிகாந்தின் அடுத்தநகர்வு என்ன? நாளை கூட்டத்தில் அறிவிப்பு.

what-is-rajinikanth-s-next-move-announcement-at-tomorrow-s-meeting
  India Border அருண் குமார்   | Last Modified : 29 Nov, 2020 03:54 pm தமிழகம் பொது

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார். அதன் பிறகு அவர் எப்போது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த 2019-ம் அக்டோபர் 29-ந் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான பரபரப்பு அறிக்கை தமிழக அரசியல் களத்தை சூடாக்கியது. அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க அடுத்த 2020 ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ந் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.

கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை. 2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசியலில் ஈடுபடலாமா என்று டாக்டர்களிடம் கேட்டபோது, கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அப்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களும், ரசிகர்களும் என்ன முடிவு எடுக்க சொல்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், ‘வெளியான அறிக்கையில் என் உடல் நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்’ என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் அறிவிப்பால் அவர் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கேள்வி குறியாக மாறி போனது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக, சென்னை வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்த் திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு ரஜினி மக்கள் மன்றம் தரப்பில் கோடம்பாக்கம் போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கூட்டம் நடத்துவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், தற்போது வரை ஆலோசனை கூட்டத்தில் அனுமதி கேட்டு மண்டல அலுவலகத்தில் ரஜினி தரப்பில் விண்ணப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

A petition has been filed with the Kodambakkam police on behalf of the Rajini People's Forum.