சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பரமக்குடி அருகே பரபரப்பு! நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்த நபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி?

excitement-near-paramakudi-the-person-who-lent-money-to-a-friend-set-himself-on-fire-and-attempted-suicide
  India Border அருண் குமார்   | Last Modified : 29 Nov, 2020 04:29 pm தமிழகம் பொது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, காந்திஜி தெருவை சேர்ந்த பிரசன்னா வயது 30, என்பவர், அப்பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு தனது சிபாரிசில் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளார். கடன் வாங்கிய நண்பர் பணத்தை சரியாக கட்டாமல் இருந்ததால், கடன் கொடுத்தவர் பிரசன்னாவை வாங்கிய கடனை திருப்பி செலுத்துமாறு தினந்தோறும்  நெருக்கடி கொடுத்துள்ளார்.

மன உளைச்சலுக்கு ஆளான பிரசன்னா, இன்று காலை 5 மணியளவில் வீட்டை விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று, ஐந்து முனை ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் வாங்கிக்கொண்டு காக்கா தோப்பு பகுதியில் உள்ள வைகை ஆற்றங்கரைக்கு சென்று பெட்ரோலை தனது உடல் முழுவதும் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத அந்த இளைஞர் அருகில் கிடந்த தண்ணீரில் விழுந்து தீயை அணைத்துக் கொண்டுள்ளார். பின்னர் தனது மொபைல் மூலம் தன்னை காப்பாற்றுமாறு காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எமனேஸ்வரம் போலீசார், இளைஞரை பார்த்தபோது சட்டை, செருப்பு உள்ளிட்டவை முற்றிலும் தீயில் கருகியது, வலியால் துடித்து கொண்டிருந்துள்ளார். அவரை மீட்ட எமனேஸ்வரம் போலீசார் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர் தீக்காயம் 90 சதவீதத்துக்கு மேல் ஏற்ப்பட்டு இருந்ததால், அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் மாறு பரிந்துரை செய்துள்ளார். ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட பிரசன்னா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

He has borrowed up to Rs 2 lakh on his recommendation. Since the friend who took the loan did not pay the money properly, the lender has given Prasanna daily crisis to repay the loan.