திருவண்ணாமலை அடுத்த சாவல்பூண்டியை சேர்ந்தவர், சுந்தரேசன், 67 தி.மு.க.வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளார், முன்னாள் அமைச்சர் பிச்சாண்டியிடம் உதவியாளராக அரசியல் வாழ்க்கையை துவங்கி படிப்படியாக வளந்தார்.
ஆறுமுறை சாவல்பூண்டி பஞ்சாயத்து தலைவராக தேர்வானார். ஏ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாக மாறி, தி.மு.க. ஒன்றிய செயலர் மாவட்ட பொருளாளர் என உயர்ந்து, தற்போது மாவட்ட துணை செயலராக உள்ளார். கட்சி தலைமைக்கும் நெருக்கமா உள்ளார். சாவல்பூண்டி சங்கப்பலகை என்ற அமைப்பை ஏற்படுத்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல பேச்சாளர்களை உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அபிதா 28 , என்ற பட்டதாரி பெண், பட்டி மன்ற பேச்சாளராக, நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானார், நாளடைவில், இருவருக்கும் காதலாக மாறி மூன்று ஆண்டுக்களாக காதலித்து ரகசிய திருமணம் செய்து, குடும்பம் நடத்தினர்.
சுந்தரேசனுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். பேத்தி வயதில் உள்ளவரை தி.மு.க நிர்வாகி திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் அ.தி.மு.கவினர் கிண்டல் அடித்து வருகின்றனர்.
இதைபற்றி சுந்தரேசனிடம் கேட்டபோது வயதான காலத்தில், தன் உதவிக்கு ஒருவர் தேவை என, மணியம்மையை ஈ.வே.ரா திருமணம் செய்தார். நான் அவரது வழியில் வந்தவன். தி.மு.க. தலைவர் கருணாநிதி காலையில் கோபாலபுரம், மாலையில் சி.ஐ.டி. காலனிக்கு செல்வார்.
அது போல் என் மனைவி தரப்பிலும், அபிதாவின் தரப்பிலும் சம்மதம் பெற்று, காதலித்து திருமணம் செய்து, சந்தோசமாக குடும்பம் நடத்தி வருகிறேன். இரு மனைவிகளும் அருகாமையில் தனி தனியாக வசித்துவருகிறோம், இருவரும் வீட்டுக்கும் சென்று வருகிறேன்.
Thiruvannamalai South District, DMK Deputy Secretary, 67, fell in love with a 28-year-old girl and married her.