சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

கலைஞர் திமுக குறித்து அழகிரி பரபரப்பு தகவல்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஜெ.முன்னிலையில் அதிமுகவில் இணையப்போவதாக அழகிரி குறித்த தகவல்கள் அடிக்கடி வந்துகொண்டே இருக்கும். அதுக்கு பிறகு அமைச்சர் பதவி கொடுத்த காங்கிரசிலேயே சேரப்போகிறார் அழகிரி என்று பேச்சு இருந்தது. அப்புறமாக கலைஞர் திமுக என்ற தனிக்கட்சி ஆரம்பிப்பதாக பேச்சு எழுந்தது. இடையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதில் முக்கிய நபராக அழகிரி இருப்பார் என்ற பேச்சும் இருந்தது.

ஓட்டுகள் சிதறாமல் இருக்கவும், இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காகவும், அழகிரியை விட்டுவிடக்கூடாது என்று செல்வி மூலமாக அழகிரியை சமாதானப்படுத்தி விட்டார் ஸ்டாலின் என்றும், மீண்டும் திமுகவில் அழகிரி என்றும் பேச்சுகள் இருந்தது.

பாஜகவில் சேரப்போகிறார் என்றும், பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கப்போகிறார் என்றும் பரபரப்பாப பேசப்பட்டது.ஆனா,  முன்னரே இதுபற்றி சொல்லப்பட்டு வந்தாலும் அழகிரி அழுத்தம் கொடுத்து பேசியிருப்பதால் அவரது ஆதரவாளர்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

நேற்று காலை முதற்கொண்டே ஆதரவாளர்கள் பலருக்கும் போன் போட்டு, தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு, ஒவ்வொரிடமும் 10 நிமிச்சத்துக்கு மேல் பொறுமையாக தனிக்கட்சி குறித்து பேசியிருக்கிறார் அழகிரி. கடைசியாக, ‘’இனிமேதான் நமக்கு தீபாவளி’’என்று சொல்லிவிட்டு போனை வைத்திருக்கிறார்.

’கலைஞர் திமுக’ என்றே தனிக்கட்சிக்கு பெயர் வைக்கப்போவதாகவும் தகவல்

Alagiri sensational information about the kalaignar DMK