சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில்அனைவருக்கும் தடுப்பூசி இலவசம்?

is-the-vaccine-free-for-everyone-in-tamil-nadu
  India Border அருண் குமார்   | Last Modified : 23 Oct, 2020 08:59 pm தமிழகம் அரசியல்

தமிழகத்தில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது,அதிக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.புதுக்கோட்டையில் நோய்ப்பரவல் குறைந்திருக்கிறது. சுமார் 6 ஆயிரம் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவன ஆலை தொடங்கப்பட்டு 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் எந்த தொழிலும் தமிழகத்திற்கு வரவில்லை என பொய் சொல்லி வருகிறார் ஸ்டாலின், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறினார்.

272 ஏரிகள் குடிமராமத்துப் பணிகள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளன. ரூ. 31 கோடியில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  வேளாண்சட்டம் விவசாயிகளுக்கு பாதுகாப்பானது. புதுக்கோட்டையில் 197 கோடி ரூபாய் செலவில் தொழில் தொடங்க முதலீடு செய்துள்ளன.  211 தொழில் நிறுவனங்கள் சுமார் 300 கோடி செலவில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஐடிசி தொழிற்சாலை புதுக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், அரசு செலவில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் புதுக்கோட்டை மாநாட்டில் அறிவித்துள்ளார்.

Experiments have increased in Tamil Nadu. Due to intensive treatment, the incidence of corona has decreased and more fever camps have been held.