சென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு

பரபரக்கும் அரசியல் தேர்தல் களத்தில் கே. ஏ. செங்கோட்டையன் அவர்க்கு முக்கியபொறுப்பு

கே. ஏ. செங்கோட்டையன் தமிழக அரசியலில்  செல்வாக்குமிக்கவராக   திகழும்  இவர் தனது சொந்த ஊரான   கோபிச்செட்டிப்பாளையம் ( குள்ளம்பாளையம் கிராமம்  ) தொகுதியிலிருந்து தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆகும் .

இவர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக 1977-ல் சத்தியமங்கலத்தியில் சட்டமன்ற உறுப்பினராகவும் , அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையத்தியில்லும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


எம்.ஜி.ஆர் அரசியலுக்கு பிறகு அதிமுக ஜெயலலிதா அணி, சானகி அணி என பிரிந்திருந்த போது ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு கோபிச்செட்டிபாளையத்தில் வென்றார். 

அதன் பிறகு தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத்தில் வனத்துறை அமைச்சராகவும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தில் விவசாயத் துறை அமைச்சராகவும், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், அதையடுத்து வருவாய்த் துறை அமைச்சராகவும் பணியாற்றி வ‌ந்தா‌ர்.

2017 ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து  பரபரக்கும் அரசியல் களத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் உறுப்பினராகவும், ஈரோடு புறநகர், தென்சென்னை வடக்கு, தெற்கு (மேற்கு) ஆகிய மாவட்டங்களுக்கு மண்டலப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளது .

K.A Sengottaiyan ( School Education Minister ) has been appointed as a member of the Election Report Preparation Committee and Regional Officer for Erode Suburban, South Chennai North and South (West) Districts.